Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய ( 24.02.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

24-02-2020, மாசி 12, திங்கட்கிழமை,

பிரதமை இரவு 11.15 வரை பின்பு வளர்பிறை துதியை.

சதயம் நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு பூரட்டாதி.

சித்தயோகம் மாலை 04.20 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 0. ஜீவன் – 0.

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். பணி தொடர்பாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரம் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். புதிதாய் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள்.

ரிஷபம்

இன்று தொழிலில் அதிகப்படியான லாபம் இருக்கும். இல்லத்தில் கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். பணியில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் காணாமல் போகும். வேலை தேடி அலைபவர்களுக்கு புதிதாய் வேலை வாய்ப்புகள் அமையும். இன்று எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கப்பெறும்.

மிதுனம்

இன்று வியாபாரம் தொடர்பாக பொருளாதார பிரச்சனைகள் இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் குடும்பத்தில் உள்ள பெண்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

கடகம்

இன்று அலைச்சல் டென்ஷன் இருக்கும். உடல்நலத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நினைப்பதால் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் பயணிக்கும் போது கவனத்துடன் செல்லவும்.

சிம்மம்

இல்லத்தில் உறவினர்களின் வருகையினால் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பெற்றோரின் அன்பை ஆதரவை இன்று பெறுவீர்கள். பணவரவு போதுமானதாக இருக்கும். கடன் பாக்கிகளை தீர்த்து விடுவீர்கள். புதியவர்களின் அறிமுகத்தால் தொழிலில் பல மாற்றங்கள் நடைபெறும். பணியில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைவடையும்.

கன்னி

இன்று பணவரவு அதிக அளவில் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். கடன்கள் தீரும். பணியில் இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகள் அகன்று விடும். தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் லாபம் ஏற்படும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

துலாம்

இன்று செய்யும் செயல்களில் தாமதமும் தடையும் இருக்கும். பணியில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். இல்லத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தினரிடம் பிரச்சினைகளை குறைத்துவிடலாம். தொழில் தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டி வரும்.

விருச்சிகம்

இன்று வெளியூர் பயணத்தினால் அலைச்சல் இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். இன்று செலவும் வரவும் ஒரே கோட்டில் இருக்கும். உறவினர்கள் மூலம் சுபச் செய்திகள் வீடு தேடி வரும். பெரிய மனிதர்களின் ஆதரவினால் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

தனுசு

இன்று செய்யும் அனைத்து செயலிலும் வெற்றி பெறுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சூழல் உருவாகும். திருமணம் போன்ற சுப முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் காணப்படும். ஆபரணம் ஆடை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று உழைப்பிற்கு தகுந்தாற்போல் ஊதியம் கிடைக்கப்பெறும். பணவரவு அதிகரிக்கும் ஆனால் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை குறைப்பது நன்மை கொடுக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வதால் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். பயணங்களின் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள்.

கும்பம்

இன்று உங்கள் திறமைகளை மற்றவர்களுக்கு வெளிக்காட்டும் நாளாக அமையும். நண்பர்களை சந்திப்பதினால்  மகிழ்ச்சி கூடும். உடல் நலம் சிறந்த அளவில் இருக்கும். பூர்வீக சொத்துகளால் நல்ல பலன் கிடைக்கும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைக் கொடுக்கும்.

மீனம்

இன்று வியாபாரத்தில் மந்தமான சூழல் காணப்படும். இல்லத்தில் பிள்ளைகளினால் தேவையற்ற செலவுகள் உருவாகும். எந்த செயலையும் பொறுமையுடன் செய்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கப்பெறும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் மனதிற்கு புதிய பலத்தை கொடுக்கும். நம்பிக்கை அதிகரிக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |