Categories
தேசிய செய்திகள்

PF பணத்திற்கான வட்டி வரவில்லையா….? EPFO கொடுக்கும் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருக்கும் அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடிமானம் செய்யப்படும். இந்த தொகை பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணத்தை சேமிப்பதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவுகிறது. இந்த பிஎஃப் பணம் தொழிலாளர்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டி.வி. மோகன் தஸ் பாய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கான வருங்கால வைப்பு நிதி கிடைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு அன்புள்ள EPFO எனக்கான வட்டி எங்கே‌? பிரதமர் மோடி உடனடியாக சீர்திருத்தங்களை செய்யவில்லை என்றால் என்னை போன்ற பிரச்சனைகளை பொதுமக்களும் சந்திக்க நேரிடும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது. அதாவது இபிஎஃப்ஒ சந்தாதாரர்களுக்கு வட்டியானது சரியான முறையில் வழங்கப்படுகிறது. எங்களுடைய சந்தாதாரர்கள் யாருக்குமே வட்டி இழப்பு ஏற்படாது. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேரில்‌ அப்கிரேடு காரணமாக வட்டி தொகையானது பிஎஃப் அறிக்கையில் காண்பிக்கப் படவில்லை. மேலும் அனைத்து விதமான சந்தாதாரர்களுக்கும் கண்டிப்பாக வட்டி பணமானது செலுத்தப்பட்டு தான் வருகிறது என்று கூறியுள்ளது.

Categories

Tech |