Categories
மாநில செய்திகள்

மத்திய பாஜக அரசின்… 1இல்ல… 2இல்ல… ”அந்த 3சட்டம்” வேல்முருகன் பரபரப்பு பேச்சு ..!!

அதிகார திமிர் பிடித்த ஆளுநரை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.  NIA என்கின்ற ஒன்றிய அரசின் இந்த புலனாய்வை, உடனடியாக கலைக்க வேண்டும். உபா என்கின்ற சட்டம் நீக்கம் செய்ய வேபண்டும் என்ற 3 கோரிக்கையை வைத்து  மனிதநேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

உபா என்கின்ற சட்டமும்  இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும்,  இந்தியாவின் ஒற்றுமைக்கும், இந்தியாவின் சமூக நீதிக்கும், இந்தியாவின் ஜனநாயக தன்மைக்கும்,  யாரெல்லாம் உழைக்கிறார்களோ,  யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ, யாரெல்லாம் எழுதுகிறார்களோ,

யாரெல்லாம் தொலைக்காட்சி ஊடகத்தில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்கள், யாரெல்லாம் முகநூல் பக்கங்களில் இந்த பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய,  அட்டூழிய, அக்கிரமங்களை  எடுத்து வைக்கிறார்களோ,  அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு.

இவை மூன்றையும் எங்களுடைய பேராசிரியர் தலைமையிலான ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையிலான இயக்கம் எதிர்க்கிறது. இவர்  மூன்றையும் ஒழிக்க வேண்டுமென்று போராடுவதற்கு இங்கு ஆயிரமாயிரம் எமது உறவுகள் கூடி இருக்கின்றீர்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |