Categories
மாநில செய்திகள்

“திருப்பதி-புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்” தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் இடையே மதியம் 2:30 மணி அளவில் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 11:14 மற்றும் 21-ம் தேதிகளில் மதியம் 3 மணி அளவில் இயக்கப்படும். அதாவது 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதனையடுத்து விழுப்புரம் மற்றும் மேல்மருவத்தூர் இடையே காலை 11:30 மணி அளவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 17-ஆம் தேதி விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படும். இதைத்தொடர்ந்து திருப்பதி மற்றும் புதுச்சேரி இடையே அதிகாலை 4:10 மணி அளவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 17-ஆம் தேதி விழுப்புரம் மற்றும் புதுச்சேரி இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் புதுச்சேரி மற்றும் திருப்பதி இடையே மதியம் 2:55 மணி அளவில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்  ரயில், புதுச்சேரி-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டு விட்டு, மதியம் 3:45 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும்.

Categories

Tech |