Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழைக்காலம் முடியும் வரை….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடையும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை ஓமதூராரில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ எட்டினே-அபெலா ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற பிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். H1N1 பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் பிறகு பள்ளிகள் மற்றும் வாகனங்கள் மூலமாக 18,973 முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை 12,162 காய்ச்சல் முகம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் 18,08,204 பேர் பயன்படுத்தியுள்ளனர். மேலும் தொடர்ச்சியாக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

Categories

Tech |