இலங்கை நாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டு அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின் போது, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வியடைந்துள்ளன.
இந்நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது. இந்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், நேபாளம் மற்றும் கத்தார் உள்பட 20 நாடுகள் ஆதரவளிக்காமல் புறக்கணித்துள்ளன. இதனை அடுத்து சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
இருப்பினும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, கொரியா குடியரசு மற்றும் உக்ரைன் ஆகிய 20 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் வெற்றிகரமாக நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் முலம் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” தொடர்பான வரைவுத் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று தீர்மானத்திலுள்ள முக்கிய அம்சமாகும். இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க உறுதுணையாக இருப்போம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுதியளித்துள்ளது. அது போல, சீனாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்தது.