ஓலா, உபெர் மற்றும் ரெபிடோ ஆட்டோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ஆட்டோ சேவைகளை நிறுத்தப்பட வேண்டும் என அரசு நிறுத்தப்பட வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்று துறையின் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில அரசு நிறுவனங்கள் தங்கள் பதில் மற்றும் இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
2 கிலோமீட்டர் குறைவான தூரங்களுக்கு கூட நிறுவனங்கள் குறைந்தபட்ச ரூ.100 கட்டணம் வசூலிப்பதாக பல பயணிகள் மாநில அரசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து விதிமுறைகளின் படி ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் இரண்டு கிலோமீட்டர்க்கு ரூ.30, அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.15 வசூலிக்க தகுதியுடையவர்கள். டாக்ஸிகளுக்கு மட்டுமே விதிகள் இருப்பதால் இந்த நிறுவனங்கள் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்க தகுதியற்றவை என்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு விதிமுறைகளை மீறி ஆட்டோ ரிக்ஷா சேவைகளை நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் அதிகம் கட்டணம் வசூலிக்கப்படுவது துறையின் கவனத்திற்கு வந்துள்ளது என்று போக்குவரத்து துறை டி.எச்.எம்.குமார் தெரிவித்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களும் தங்கள் சொந்த மொபைல் பயன்பாடுகள் அறிமுகப்படுத்ததவதன் மூலம் செயலி அடைப்பிலான பயணத்திட்டத்தை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர். “நம்ம யாத்ரி” செயலி நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.