Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை” சினிமாவை விட்டு விலகும் நயன்….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 வருடங்களாக காதலித்தார். கடந்த ஜூன் மாதம் நயனுக்கும் விக்கியும் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி கிட்டத்தட்ட 3 மாதங்களை கடந்தும் நயன்தாராவும், விக்கியும் பல்வேறு இடங்களுக்கு ஹனிமூன் சென்று வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தற்போது அறிமுகம் ஆகிறார். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா படப்பிடிப்புக்கு சரிவர வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது சினிமாவை விட்டு விலகுவதற்கு நயன்தாரா முடிவு செய்துள்ளதாக நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

அவருக்கு  தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாம். இந்த ஆசையை நயன் தன்னுடைய நண்பர்களிடம் மட்டுமே கூறியுள்ளாராம். இதற்கான ட்ரீட்மெண்ட் தற்போது நயன்தாரா எடுத்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் நயன்தாரா ஆர்வமாக இருப்பதால் சினிமாவை விட்டு விலகி பட தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |