தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பபிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இவர் சின்ன வீடு என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை பபிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜஸ்டின் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தவர்.
அதன் பிறகு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோதும் எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் கடைசி வரைக்கும் அவருடைய விசுவாசியாகவே இருந்தார். அவருடைய மகளான எனக்கும் அதே குணம்தான் இருக்கிறது. நான் கமல்ஹாசன் திரைப்படத்தில் கவர்ச்சி நடனம் ஆடியதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். இப்போதும் கமல்ஹாசன் என்னை நடிப்பதற்கு அழைத்தால் நான் கவர்ச்சி நடனம் கூட ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். நாயகன் படத்தில் நான் நடனமாடிய நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலை இதுவரை ரசிகர்கள் மறக்கவில்லை. மேலும் நடிகை பபிதா சிரித்தாலே தீபாவளி தான் என்று கூறி என்னை கொண்டாடுகிறார்கள் என்றார்.