Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டு யானை…. பர்கூர் மலைப்பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சுண்டப்பூர் பிரிவு அருகே இருக்கும் சாலையில் காட்டு யானை அங்கும் இங்கும் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து யானை 30 நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் மலைப்பகுதியில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |