Categories
மாநில செய்திகள்

BREAKING : 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு ….!!

5 IPS அதிகாரிகளுக்கு DGPயாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த 5 அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்ததையடுத்து 5 அதிகாரிகளுக்கும் பணியிடங்களை வழங்கி  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் ஐபிஎஸ் அதிகாரி ஆபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும் , சுனில்குமார் சிங் சிறைத்துறை டிஜிபியாகவும் , சுனில் குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபியாகவும் , சேஷசாயி சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல ஐஜியாக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதத்திற்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |