நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இதற்காக அரசு தரப்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்வது மற்றும் குறை தீர்ப்பு விஷயங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் அக்டோபர் எட்டாம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது.
பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ள நிலையில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ரேஷன் அட்டைதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பல திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் எனவும் குறைகள் முகாமில் சரிபார்த்து வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் குறைகள் இருப்பின் மனு செய்து பயன் பெறலாம் எனவும் ரேஷன் அட்டையில் திருத்த மேற்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.