இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
அதாவது ஏடிஎம்களில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு குறிப்பிட்ட தொகை கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பான ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்தச் செய்தியில் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் கட்டணம் பிடிக்கப்படும் என செய்தி வெளியாகி உள்ளது.இந்த செய்தி வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது முற்றிலும் தவறானது என தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
PIBசார்பாக மேற்கொள்ளப்பட்ட உண்மை சரிபார்ப்பு சோதனையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் ஐந்து முறை வரைஇலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றோம் அதனை தாண்டி பரிவர்த்தனை மேற்கொண்டால் அதிகபட்சமாக 21 ரூபாய் வரை மட்டுமே பிடிக்கப்படும் எனவும் தெளிவாக கூறியுள்ளது. எனவே இது போன்ற போலியான செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.