Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு‌ தடை….. அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்‌?….. வெளியான தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ட்விட்டரில் பதிவு போட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநர் ரவியை சாடியிருந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பு நான் கூறியிருந்தேன்.

அதை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞர் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிர் இழக்க கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் 1ஆம் தேதியே ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கப்படுத்த அவசர சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை தொடரில் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |