தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தமிழக அரசின் அவசர சட்டத்தில், “தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டால் 3 மாதங்கள் சிறை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல், ஆன்லைன் விளையாட்டை நடத்துவோருக்கு 3ஆண்டுகள் சிறை (அ) ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.