Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவை மீட்டு தரக்கோரி…. இடிதாங்கி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

சென்னை கோயம்பேடு லட்சுமி நகர் பகுதியில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஜான்பால் ஜெய்நகர் பார்க் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள இடிதாங்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஜான்பால் கூறியதாவது, தனது ஆட்டோவை அவரது நண்பர் ஒருவர் எடுத்து சென்றுள்ளார். அதனை மீட்டு தர வேண்டும் என ஜான்பால் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோவை மீட்டுத் தருவதாக உறுதியளித்த பின் ஜான்பால் இடிதாங்கி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் ஜான்பாலை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |