Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலி பத்திரங்கள் தயாரிப்பா…..?? முன்னாள் அமைச்சருடன் சென்று மனு அளித்த பொதுமக்கள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிலர் எங்கள் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான இடத்திற்கு போலியான பத்திரங்களை தயாரித்துள்ளனர். தற்போது பெருந்துறை தாலுக்கா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலத்திற்குரிய பட்டா கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர். மேலும் எங்களது கிராமத்தில் வசிப்பவர்கள் குறித்தும், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் குறித்தும் தவறான செய்தியை பரப்புகின்றனர் எனவே போலி பத்திரம் தயார் செய்தவர்கள் மீதும், சமூக வலைதளத்தில் தவறான செய்தியை பதிவிட்டவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |