தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் பிரியா பவானி சங்கர். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் யானை திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது ருத்ரன், பத்து தல, அகிலன், இந்தியன் 2 என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் குறைந்த காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியா பவானி சங்கர் தற்போது மளமளவள வளர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷின் இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் பிரியா பவானி சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது.
இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகனுக்கு ஜோடியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படத்தில் நடித்து வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.