11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம் அக்., 27 காலை 10 மணிக்கு நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு பெறப்படும் கருத்துக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தேர்வு மையங்களாக பள்ளிகளை தேர்வு செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்படும். மாணவர்கள் தேர்வு எழுத 10 கிமீ தூரத்திற்கு தேர்வு மையங்களுக்கு செல்லும் நிலைமை இருந்தால் அவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளிலேயே புதிய தேர்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளபட வேண்டும்.