மத்திய பிரதேசத்தில் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரு எம்எல்எக்களும் மதுபோதையில் ரயிலில் பயணம் செய்தனர். அப்போது, ரெயிலில் 2 எம்.எல்.ஏ.க்கள் பயணித்த அதே ஏசி வகுப்பில் குழந்தையுடன் தனியாக வந்த பெண்ணுக்கு அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுபற்றி அப்பெண் கணவருக்கு போன் மூலம் தெரிவிக்கவே, அவர் ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே போலீசை டேக் செய்து தொடர்ந்து ட்விட்டரில் ரயில்வே நிர்வாகத்திடம் கூற, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.