கர்நாடக மாநிலத்தில் சசிகலா (46), அவரின் மகன் சஞ்சய் (26) இருவரும் பெங்களூரில் உள்ள சசிகலாவின் தாயார் சாந்தகுமாரி (69? வீட்டிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்றுள்ளனர். அப்போது தனது பாட்டி சாந்தகுமார் இடம் கோபி மஞ்சூரியன் கொடுத்து சாப்பிடுமாறு சஞ்சய் வற்புறுத்தியுள்ளார்.ஆனால் சாந்தகுமாரி அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் கையில் வைத்திருந்த பாத்திரத்தால் சாந்தகுமாரியின் தலை மீது ஓங்கி அடித்துள்ளான். அதனால் காயம் ஏற்பட்ட சாந்தகுமாரி சில நொடிகளில் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சையின் தாய் சசிகலா தனது நண்பர் நந்தீஸ் உதவியுடன் வீட்டில் குழி தோண்டி புதைத்து விட்டார்.
இதனை தொடர்ந்து வாடகைக்கு இருந்த அந்த வீட்டை காலி செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு வீட்டில் உரிமையாளர் அந்த வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது ரத்தக்கரை படிந்த சீலையும் குழி தோண்டப்பட்டதற்கான அடையாளமும் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விசாரணை நடத்தியதில் நந்திஸ் முதலில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் மகராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் மூன்று நாட்களுக்கு முன்பு தாய் மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.