துப்பறிவாளன் இரண்டாம் பாக படப்பிடிப்பில் இருந்து விலகிய இயக்குனர் மிஸ்கின்
இயக்குனர் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் வெற்றி வாகை சூடி அதைத்தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகம் எடுக்க துவங்கியுள்ளனர். இரண்டாம் பாகத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரசன்னாவுடன் ரகுமான் மற்றும் கௌதமி இணைந்துள்ளனர்.
திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மிகப் பெரிய வசூலை ஈட்டியதை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் பங்கு பெற்று வரும் மிஸ்கின் சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளார்.
இதன் காரணமாக படப்பிடிப்பிலிருந்து மிஷ்கின் தற்போது விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதி இருக்கும் காட்சிகளை விஷால் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இது குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கவில்லை.