வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக அணுக வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சமீபகாலமாக பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலவித நூதன மோசடிகளிலும் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மத்திய அரசு முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக அணுக வேண்டும். பொய்யாக வேலை வாய்ப்புகளைக் காட்டி சீன மாபியா கும்பல் ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.அவர்கள் மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளுக்கு ஆட்களை கடத்திச் சென்று சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றனர். இதுபோன்ற சிக்கி 150 பேரை இந்தியா இதுவரை மீட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.