Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை…. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டு முறை தவறு செய்யும் நபர்கள் முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை அனுபவிக்க கூடும்.ஆணையத்தால் விதிக்கப்படும் தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |