இயக்குனர் சுந்தர் சி படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன், யோகி பாபு, பிரதாப் போத்தன், அருணா பால்ராஜ், சம்யுக்தா, பேபி விர்த்தி, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் காபி வித் காதல் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தற்போது படக்குழுவினர் ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். அதன்படி நவம்பர் 4-ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.