Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. “கிரிவலம் செல்ல உகந்த நேரம்”…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கிருக்கும் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். அந்நேரத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்காலம் போல் மக்கள் கூட்டம் இருக்கும்.

இந்த நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி நாளை அதிகாலை 04.06 மணிக்கு தொடங்கி வருகின்ற 10-ம் தேதி அதிகாலை 03.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

Categories

Tech |