போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பள்ளி, கல்லூரி வளாகங்கள் போதைப்பொருள் பயன்பாடற்ற வளாகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.