Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு நாணயத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியா….? கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர்….!!!!

பிரிட்டனில் புதிய சேன்சலர் தனது மினி பட்ஜெட்டை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun முதலான அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளரான Susannah Streeter இது குறித்துக் கூறியதாவது, “சறுக்கு மரத்தில் சறுக்குவது போல, பவுண்டின் மதிப்பு வேகமாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதுபோன்று இன்று காலை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அரசின் பொருளாதார நிர்வாகம் மீது நம்பிக்கை குறைந்துகொண்டே வருகின்றது” என்று  அவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து புதிய  பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸ்ஸின் அரசு, மக்களுக்கு ஏராளம் வரிச்சலுகைகள் அறிவித்துள்ளதுடன், வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆற்றல் பிரச்சினையை எதிர்கொள்ள நிதி உதவியும் செய்வதாக அறிவித்துள்ளதால், அதற்காக  ஏராளமாக பணம் தேவைப்படுகின்றது. அதற்காக அரசு பெருந்தொகை கடனாக வாங்க வேண்டியுள்ளது. அந்த கடன் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

இதனை அடுத்து சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மினி பட்ஜெட்டில் ஏராளம் வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பெரிய தொகையை அரசு எப்படி ஈடு செய்யும் என்ற அச்சம்  உருவாகியுள்ளது. மேலும் பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகின்றது. இதற்கிடையில், பிரதமர் இல்ல செய்தித்தொடர்பாளர், சந்தை அல்லது நாணயம் தொடர்பிலான விடயங்கள் குறித்து நாங்கள் கருத்துத் தெரிவிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

 

Categories

Tech |