Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் மீண்டும் மோதல்…. ரசிகர் ஒருவர் பலி…. அர்ஜென்டினாவில் பரபரப்பு….!!!!

அஜெண்டினா நாட்டில் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டியை காண மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனை அடுத்து மைதானம் நிரம்பி வழிந்த காரணத்தால் அது பூட்டப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்ல முற்பட்டதால் அவர்களை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் உள்ளனர். இதில் ரசிகர் ஒருவர் பலியானதோடு பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ரசிகர்களால் ஏற்பட்ட கலவரத்தில் 131 பேர் பலியான சோகம் மறைவதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |