பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இவரும் மலையாள திரையுலகில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபல நடிகர்கராக வலம் வருகிறார். தனது 7 வயதில் மலையாள திரைப்படமான ‘கொச்சி கொச்சி சந்தோசங்கள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் சிறந்த குழந்தை நட்சத்திரக்கான தேசிய திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்வாசனை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருந்தார். அதனைப் போல பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “நட்சத்திரம் நகர்கிறது” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காளிதாஸ் ஜெயராமன், மாடலும் நடிகையுமான தாரிணி காளிங்கராயருடன் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து காதலுக்கான ஹிண்டையும் கொடுத்துள்ளார். துபாயில் சொகுசு படகு ஒன்றில் தாரிணியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு கேப்ஷனாக ஹார்டின் கொடுத்துள்ளார். இதன் மூலம் காளிதாஸ் காதல் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கிடையில் காளிதாஸ் பகிர்ந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும் குடும்பப் புகைப்படத்தில் தாரிணி இடம் பெற்றிருந்தார். அப்போதே இவர்கள் காதலிப்பதாக கிசு கிசுகள் கிளம்பியது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றவர் தாரணி காளிங்கராயர் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram