Categories
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் சிஏ,எம்பிஏ முடித்தவர்களுக்கு வேலை! 

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், முதுநிலை மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 08

பணியிடம்: கரூர், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா

பணி மற்றும் காலியிடங்கள்: Chief General Manager (Finance), General Manager (Finance),  Deputy General Manager (Finance), Assistant General Manager (Marketing), Senior Manager (Marketing),  Senior Manager (Marketing), Manager (Marketing), Senior Manager (Marketing), Manager (Marketing), Manager (Marketing), Deputy Manager (Marketing),  Deputy Manager (Marketing), Assistant Manager (Marketing). 

தகுதி: CA, ICWAI, MBA(Marketing) முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 55 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை:  https://www.tnpl.com/uploads/careers/e803a8fce27862c8149c7442bbd66493.pdf என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  

CHIEF GENERAL MANAGER(HR) TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
NO.67, MOUNT ROAD, GUINDY,
CHENNAI – 600 032, TAMIL NADU. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.03.2020

Categories

Tech |