மகரம் ராசி அன்பர்களே, இன்று போக்குவரத்தில் மிகவும் கவனமாகவே செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். திறமையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய திறமை இன்று பாராட்டைப் பெறமுடியாது என்ற எண்ணம் மேலோங்கும். நண்பர்களின் மூலம் சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் ஓரளவு சிறப்பை கொடுக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள் .
வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் விலகி செல்லும். பழைய பாக்கிகளும் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாகவே முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். நீண்டதூரப் பயணங்களால் காரிய அனுகூலம் ஏற்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கொஞ்சம் சிறிதேனும் தடைகள் இருக்கும். கடினமாக உழைத்துத்தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை கொஞ்சம் எழுதிப் பார்ப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு எப்போதுமே ஒரு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்