தமிழகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு அரசு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அண்மை காலத்தில் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.