Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! ஐஸ்வர்யா ராய் அபிஷேக்கை 2-வதாக திருமணம் செய்தாரா….? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

உலக அழகியான மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராய் நடிக்க தொடங்கி சில படங்களிலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஆகிவிட்டார். அதனைப் போல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் தான் இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உம்ராவ் ஜான் எனும் படத்தில் நடித்த இவர்கள் தொடர்ந்து குரு, தூம் 2 ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தார்கள். அப்படித்தான் இருவருக்கும் சந்திப்பு ஏற்பட்டது. குரு படம் வெளியான சமயத்தில் அபிஷேக்பச்சத்திற்கு ஐஸ்வர்யா மீது காதல் மலர அதை டொரண்டாவில் வைத்து அவர் அழகான மோதிரத்தை கொடுத்து தன்னுடைய காதலை அபிஷேக் வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதற்கு ஐஸ்வர்யாவும் ஓகே சொன்னார். இதனையடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவை வீட்டுக்கு அழைத்துச் சென்று பெற்றோர்களிடம் காலில் விழுந்து சம்மதத்தை அபிஷேக் வாங்கி விட்டார். அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மிகப்பிரமாண்டமாக மும்பையில் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என கோடி கணக்கில் செலவு செய்து அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யாராய் திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் தான் உலகில் பிரபலமான ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஏற்கனவே ஒரு திருமணம் செய்துள்ளார் என்பதுதான்.

இது குறித்த சர்ச்சையை நீண்ட நாட்களாக நிலவிய போது இந்த கேள்விகளுக்கும் விடையும் கிடைத்தது. அதாவது ஜாதகரீதியாக சில பெண்களுக்கு சில தோஷங்கள் இருப்பது வழக்கம். அதனால் கூட திருமணங்கள் தடைபடும், பிரச்சனைகள் எழலாம் போன்ற விஷயங்கள் சொல்லப்படுவது உண்டு. அப்படி ஒரு தோஷத்திற்கு பரிகாரம் செய்த பின்பு ஐஸ்வர்யா திருமணம் செய்வது நல்லது என ஜோதிடர் சொல்லியிருந்தார். எனவே ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இரு வீட்டாரும் வாரணாசிக்கு சென்று இந்த சடங்கு திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள். மாங்கல்யம் தோஷத்தை கழிப்பதற்காக வாரணாசியில் கும்ப விவாக நடத்தப்பட்டது. அப்போது ஐஸ்வர்யா ராயை அமர வைத்து பூஜைகள் செய்து ஒரு சிறிய மரத்திற்கு தாலி கட்ட வைத்தார்கள். இந்த திருமணம் பற்றி ஊர் முழுக்க பேச்சாக இருந்தது. இது குறித்து அந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மட்டுமில்லாமல் அமிதாப்பச்சனும் ஊடகங்களுக்கு நிறைய விளக்கங்களை கொடுத்து சர்ச்சையை முடித்து வைத்தார்கள்.

Categories

Tech |