அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நெதர்லாந்திற்கான தூதராக பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
அமெரிக்க அரசு நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவரை நியமித்திருக்கிறது. இவரை நியமனம் செய்ததற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கி இருக்கிறது.
அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஷெபாலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இது குறித்து கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதாவது, நெதர்லாந்து நாட்டிற்கான அடுத்த தூதராக ரஸ்தான் டுகாலை நியமனம் செய்யும் சிறப்பு தகுதியை பெற்று இருக்கிறேன். இதில் சிறப்பாக அவர் பணிபுரிய வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.