உதவி செய்வது போல நடித்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சமீபத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு திரையுலக உலக நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இதற்கிடையில் ராஜேஷ் பிரீத்தீவ் என்பவர் மணிக்கு உதவி செய்வது போல நடித்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மருந்துகள் வாங்குவதற்காக போண்டாமணியின் மனைவி தேவியிடம் ராஜேஷ் ஏ.டி.எம் கார்டை பெற்று சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனை அடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 1 லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.