அமெரிக்காவின் யார்க் நகரில் ஜனநாயக கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியுள்ளார். அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனும் உலகம் அணு ஆயுத விளிம்பிலிருந்த காலகட்டதுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பிட்டு பேசியுள்ளார். தனது தோல்விக்கு பதில் அளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல் 1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது என அவர் கூறியுள்ளார்.
மேலும் உக்ரைனில் போராட்டங்கள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படும் போது அதற்கு பதிலடி தரும் விதமாக அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பற்றி ரஷ்ய ஜனாதிபதி புதின் நகைச்சுவை செய்யவில்லை என அமெரிக்க ஜனாதிபதி அழுத்தமாக கூறியுள்ளார். 300,000 அவசரகால படைகளை அணி திரட்டுவதற்கான அவரது முடிவு மற்றும் சிறப்பு நடவடிக்கை பற்றிய அவரது தவறான கருத்துக்கள் போன்றவற்றிற்கு மத்தியில் புடினின் நிலைமை இன்னும் ஆபத்தானதாகி வருகின்றது.
இந்த சூழலில் ரஷ்யா உடன் இணைக்கப்பட்ட டொனெட்ஸ்க்,லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற இடங்களில் உக்ரைன் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கெர்சன் நகரில் பல குடியிருப்புகளை உக்ரைன் ஆயுதப்படை விடுவித்தும் வருகின்றது. ரஷ்யாவின் கோட்பாட்டின்படி ரஷ்ய பிரதேசமாக கருதப்படும் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை கொண்டு ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை நியாயப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பும் உறுதிப்படுத்தி இருக்கிறது அதில் தற்போதைய ரஷ்யாவின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக நம்புவதாக கூறியுள்ளது.