வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் மழைநீர் வடிகால், தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திடீரென்று ஆய்வு செய்தார். யாரிடமும் சொல்லாமல், முதல்வர் திடீர் விசிட் அடித்ததால், அதிகாரிகள் பதற்றமடைந்துள்ளனர். பின், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.