ப்ரஸல்ஸில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தன்று தனது பாடசாலை நண்பர்களுடன் இத்தாலிக்கு செல்வதற்காக 17 வயதான shanthi de corte என்பவர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்த சூழலில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கு அதிகமான காயங்களுடன் தப்பித்துள்ளனர். இதில் லேசான காயங்களுடன் சாந்தி உயர் தப்பித்துள்ளார்.
ஆனால் அதன் பின் உளவியல் ரீதியாக சாந்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் மன அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை மேற்கொண்டும் அவரால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இது மட்டுமல்லாமல் சாந்தியின் தாயார் சமீபத்தில் அதிர வைக்கும் பின்னணி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு பின் சாந்தி ஒருபோதும் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்ததில்லை எனவும் உளவியல் ரீதியாக கடமையாக பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் 2018 மற்றும் 2020 ஆம் வருடத்தில் இரண்டு முறை தற்கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து இந்த நிலையில் இருந்து மீள்வதற்காக அவர் கருணை கொலை செய்து கொள்ள மருத்துவர்கள் நாடி உள்ளார். பெல்ஜியத்தில் கருணை கொலை சட்டபூர்வமாக முன்னெடுக்கப்படுவதனால் இரண்டு உளவியல் மருத்துவர்களுடன் ஒப்புதலுடன் 2020 ஆம் வருடம் மே மாதம் ஏழாம் தேதி சாந்திக்கு கருணை கொலைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.