செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எல்லா திட்டத்துக்கு பிரதம மந்திரியின் பெயர் வச்சுக்கிட்டு, அவங்க கொடுக்குற நிதி குறுக்கிக்கிட்டே போயி, நம்ம கொடுக்குற நிதியை வச்சு, பிரதம மந்திரியை விளம்பர செய்ற மாதிரி, பிரச்சாரம் செய்யற மாதிரி ஆக்கிட்டு இருக்காங்க. என்னைக்காவது ஒரு நாள் இதனை திருத்தி ஆகணும்.
நான் ஏற்கனவே முதலமைச்சரிடமே கேட்டிருக்கிறேன்.. இதுல நாம 75% 80% நிதி கொடுக்கும் போது, எப்படி பிரதம மந்திரி என பெயரை மாற்றுவது. இப்போ அரசின் மானிய வீட்டுட்டு ஏதோ ஹிந்தியில் பேரு வைக்கிறாங்க. அது கூட புரிய மாட்டேங்குது. அதுல சொல்றாங்க.. ஒரு லட்ச ரூபாய் அவங்க கொடுக்குறாங்க, 4 லட்சம் ரூபாய் நாம் கொடுக்கின்றோம்.
ஆனா அதுக்கு ”பிரதான் மந்திரி” என பெயர் சொல்லணும். எனவே இதெல்லாம் ரொம்ப அரசியல் ரீதியா நடக்குது. இதை ஏதாவது ஒரு வகையில் திருத்திக்கணும். நல்ல பகுத்தறிவு இருக்கிற மாநிலம், நல்ல கல்வி இருக்கிற மாநிலம் அதனால யார் கிட்ட இருந்து எவ்வளவு பணம் வருது ? என அரசாங்கத்தோட கடமை எடுத்து சொல்லணும் என தெரிவித்தார்.