கன்னி ராசி அன்பர்களே, இன்று தன வரவு கூடும் நாளாகவே இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். பெயரும், புகழும் ஓங்கி நிற்கும். இன்று பெண் சினேகம் புத்துணர்ச்சி கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும். சகோதரரின் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். உறவினர்களிடம் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அன்பாகப் பேசுவது ரொம்ப நல்லது. மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமா பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்