நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்கு மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி ரூபாய் 100 மதிப்பிலான ஒரு கிலோ ரவை, பருப்பு, நிலக்கடலை, சமையல் எண்ணெய் மற்றும் மஞ்சள் ஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 30 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளில் அரசின் இந்த சலுகையை மக்கள் பெற்று பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது.