குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருக்கும் புற்களை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பேருந்துகளில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்த செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், தொழிலாளர்கள் இரவு நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது. காட்டெருமைகள் நிற்பதை கண்டால் ஒலி எழுப்புவது, புகைப்படம் எடுப்பது, வாகனங்களை இயக்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர்.