குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாரா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9 ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு இவர்கள் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடினர். தற்போது ஸ்பெயின் மற்றும் துபாயில் இரண்டு மாதங்களாக சுற்றுலா சென்றுள்ளனர்.
சமீபத்தில் துபாயில் விக்னேஷ்சிவன் பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடினார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், நயன்தாரா குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதால் வயது அதிகமாகி விட்டதால் மருத்துவரை அனுகியுள்ளாராம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் 9 மாதங்கள் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நயன்தாராவிடம் கூறினார்களாம். இந்நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதால் நயன்தாரா சினிமாவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.