Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு….. கூட்டுறவுத்துறை திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் எந்தவித மளிகை பொருட்களும் சிந்தாமலும் பாதிப்பு இல்லாமல் தான் மக்களுக்கு வழங்க வேண்டும் .

அவ்வாறு கீழே சிந்தும் பற்றத்தில் அவற்றை உடனே சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்கள் அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதன்படி, மக்கள் வாங்கும் காலாவதி தேதி ஆகியவற்றுடன் தரமானதாக உள்ளதா என்று ஆய்வு செய்து வழங்க வேண்டும். இவற்றை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |