Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலில் இருக்கும் இம்ரான் கான்…. எந்த நேரத்திலும் கைது?…

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், எப்போது வேண்டுமானாலும் கைதாக நேரிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், மீது தெஹ்ரீக் -இ- இன்சாப் என்ற கட்சிக்காக பல நாடுகளில் சட்டவிரோதமான முறையில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பெடரல் ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது. அதில் பத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கி பிற நாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

எனவே தற்போது, அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றும் அவர் வெளிநாட்டிற்கு தப்பி விடாமல் இருப்பதற்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவரின் வீட்டிற்கு முன்பாக ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கிறார்கள்.

Categories

Tech |