Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை(அக்.9) திமுக பொதுக்குழு கூட்டம்… ஏற்பாடுகள் தீவிரம்…!!!!!

சென்னையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் 15ஆவது பொது தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் புள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்புகளுக்கான தேர்தல் பற்றியும் தணிக்கை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தனது அறிவிப்பில் துணை முருகன் கூறியிருந்தார். முன்னதாக திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கூறியுள்ளது.

Categories

Tech |