ரயில்வே துறை நாடு முழுவதிற்குமான வழித்தடங்களில் ரயில் சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஆனால் ரயில் பயணத்தில் ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் தனியாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் நீண்ட தூர பயணங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாக திட்டம் கோரிக்கைகள் நீண்ட நாளாக வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து சில மாதங்களுக்கு முன்பாக ரயில்வே வாரியம் இனி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனியாக டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதிகள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் தற்போது குழந்தைகளுக்கான டிக்கெட் விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நீண்ட தூர பயணங்களின் போது குழந்தைகளுக்கான இருக்கைகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கான டிக்கெடுகளின் அதே விலையில் தான் குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றனர். குழந்தைகளுக்கான டிக்கெட் ரயில் நிலையங்கள் மற்றும் ஆன்லைன் போர்டல்களில் இருந்து விரைவில் வழங்கப்படும் என்றும் பெற்றோர்களுக்கு தனி இருக்கே தேவையில்லை என்றால் குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.