முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகம் எப்போதும் திராவிட பூமி தான். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சிந்தாந்தம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு திமுக அரசு வேண்டுமென்றே தடை விதிக்கிறது.
இதனால் தான் தமிழ்நாடு இந்து பூமியாக மாறுகிறது போன்ற வாதங்கள் பெரிதாகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு வரிகள் உயர்ந்துள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறினார்.