நம் உடலில் நெஞ்சு சளி போக்கி, உடலில் வலிமையை உண்டாக்க கூடிய சக்தி பருத்தி பாலிற்கு உள்ளது.
தேவையான பொருட்கள்:
பருத்திக்கொட்டை – 200 கிராம்
பச்சரிசி – அரை கப்
சுக்கு – ஒரு சின்னத் துண்டு
ஏலக்காய் – 7
கருப்பட்டி – அரை கிலோ
தேங்காய் (துருவியது) – ஒரு கப்
செய்முறை:
- பருத்திக்கொட்டை நன்றாக 2 மணிநேரம் ஊறவைத்து கொள்ளுங்கள், பச்சரிசியும் ஊற வைக்க வேண்டும். ஏலக்காய், சுக்கு நன்கு பொடியாக நசித்து வச்சிக்கோங்க. கருப்பட்டி நச்சு வச்சுக்கணும்.
- பிறகு பருத்திக்கொட்டையை அரைச்சி ஒரு மெல்லிய துணியால் வடிகட்டி பருத்திப்பால் எடுக்கவேண்டும். பச்சரிசியும் மையாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் பருத்தி பாலை ஊற்ற வேண்டும், அதோட பச்சரிசி பாலும் ஊற்றி ஒன்றாக கொதிக்க விடுங்கள்.
- கொதித்து வெந்து வரும்பொழுது நாம் சுக்கு, ஏலக்காய் பொடியை போட்டு கிளறிவிட வேண்டும், அடிபிடிக்காமல் மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். கருப்பட்டி நச்சு வைத்திருப்பதையும் போட்டு கிளறவேண்டும், கருப்பட்டி முழுமையாக கரைந்ததும் துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கிவிடுங்கள்.. அருமையான பருத்தி பால் ரெடி..!